மனிதாபிமான நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட குண்டுகள் மற்றும் ரவைகள் கடற்படை மீட்டுள்ளது

கடற்படை மற்றும் பொலீஸ் அதிரடிப்படையினர் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 7 ஆம் திகதி முல்லைதீவு அலம்பில் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட குண்டுகள் மற்றும் ரவைகள் கண்டுபிடித்தனர்.

கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் முல்லைதீவு பொலீஸ் அதிரடிப்படையினர் ஒருங்கிணைந்து ஆலம்பில், கோஹொம்பகாஸ் சந்தி பகுதியில் பல குண்டுகள் மற்றும் ரவைகள் மீட்டனர். நான்கு 81 மிமீ மோட்டார் குண்டுகள், 7.62 x 54 மிமீ ரவைகள் 357, 03 கை குண்டுகள் மற்றும் டி -56 துப்பாக்கிக்காக பயன்படுத்தப்படுகின்ற ஒரு மெகசின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மனிதாபிமான நடவடிக்கையின் போது இந்த குண்டுகள் மற்றும் ரவைகள் பயங்கரவாதிகளால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், குறித்த குண்டுகள் மற்றும் ரவைகள் முல்லைதிவு போலீஸ் அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.