போதைப் பொருள் கடத்தல்காரர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலீஸ் அதிரடிப்படையினர் ஒருங்கிணைந்து 2019 ஆக்டோபர் 07 ஆம் திகதி வேலனி, செட்டிபுரம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஒரு போதைப்பொருள் விற்பனையாளருடன் 95 கிராம் கேரள கஞ்சா கைது செய்யப்பட்டன.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை மற்றும் யாழ்ப்பாணம் பொலீஸ் அதிரடிப்படையினர் ஒருங்கிணைந்து வேலனி செட்டிபுரம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பாதையில் சென்ற சந்தேகத்திற்கிடமான ஒரு மோட்டார் சைக்கிளொன்று கண்கானிக்கப்பட்டது குறித்த மோட்டார் சைக்கிள் மேலும் சோதிக்கும் போது மோட்டார் சைக்களில் பயணித்த நபரிடமிருந்து 95 கிராம் கேரள கஞ்சா கைது செய்யப்பட்டன.

34 வயதான சந்தேகநபர் வேலனி பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் ஊர்காவற்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.