பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி திட்டமொன்று திருகோணமலையில்

திருகோணமலை திஸ்ஸ மகா வித்யாலயத்தில் மாணவர்களுக்கு 2019 அக்டோபர் 05 மற்றும் 06 திகதிகளில் கடற்படையால் தலைமைத்துவ பயிற்சி திட்டமொன்று நடத்தப்பட்டது.

அதன்படி, திஸ்ஸ வித்யாலயத்தின் ஆசிரியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயிற்சி திட்டம் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை மனநல பிரிவின் வீர்ர்களினால் மேற்கொள்ளப்பட்டது. இதுக்காக திருகோணமலை திஸ்ஸ மகா வித்யாலயத்தின் மாணவ தலைவர்கள் பங்கேற்றனர்.

இங்கு தலைமைத்துவ திறன்கள், யோகா பயிற்சி மற்றும் விளையாட்டுத் திட்டங்கள் உட்பட பல நடவடிக்கைகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பல்வேறு சமூக மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து கல்வி கற்பிக்கப்பட்டது.