ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் இருந்த சந்தேகத்திற்கிடமான மூன்று நபர்கள் கடற்படையால் கைது

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் நெடுஞ்சாலை நுழைவாயிலில் இரும்பு சேகரித்த மூன்று சந்தேக நபர்களை கடற்படை 2019 அக்டோபர் 08 ஆம் திகதி கைது செய்துள்ளது.

அதன் படி, ஹம்பாந்தோட்டை துறைமுக நெடுஞ்சாலை நுழைவாயிலில் முச்சக்கர வண்டியில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த மூன்று நபர்களை தெற்கு கடற்படை கட்டளை கவனித்துள்ளது. அங்கு கடற்படையினர் இவர்களிடம் மேற்கொன்டுள்ள விசாரணையின்போது, நெடுஞ்சாலையில் இரும்பு சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்ததுடன் குறித்த சந்தேக நபர்களை கடற்படை கைது செய்துள்ளது.

அங்கு அவர்களிடமிருந்த முச்சக்கர வண்டி மற்றும் சேகரிக்கப்பட்ட 200 கிலோ கிராம் இரும்பு ஆகியவை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் 26 முதல் 36 வயதுடைய அம்பலந்தோட்டை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், மேலும் அவர்களுடன் முச்சக்கர வண்டி மற்றும் இரும்பு ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பாந்தோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.