யானையின் முத்துக்கள் விற்பனைக்கு முயற்சித்த 03 நபர்கள் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 ஆக்டோபர் 08 ஆம் திகதி அக்கரைப்பற்று பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது யானையின் முத்துக்கள் வைத்திருந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தென்கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் கல்முனை உதவி போலீஸ் அதிகாரி அலுவலகம் ஒருங்கிணைந்து அக்கரைப்பற்று பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த 03 சந்தேக நபர்களும் 03 யானை முத்துக்களுடன் கைது செய்யப்பட்டனர். அங்கு மேற்கொன்டுள்ள மேலதிக விசாரணையின் மூலம், இந்த சட்டவிரோத யானை முத்துக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இந்த வியாபாரத்தில் ஈடுபடுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், இந்த சந்தேகநபர்கள் 30 மற்றும் 39 வயதுடைய அக்கரைப்பற்று பகுதியில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது., யானை முத்துக்களுடன் சந்தேக நபர்கள் கல்முனை போலீசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.