போதைப் பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர்பர் 08 ஆம் திகதி முந்தலம கீரியங்கல்லிய பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது. 02 கிராம் ஹெராயினுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

அதன்படி, முந்தலம கீரியங்கல்லிய பகுதியில் வட மேற்கு கடற்படை கட்டளை மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் நடத்திய கூட்டு சோதனையின் போது குறித்த சந்தேக நபரை கைது செய்யப்பட்டன. மேலும் மேற்கொன்டுள்ள விசாரனையின் போது இவர் இப் பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர் என்பதும் தெரிய வந்துள்ளதுடன் குறித்த சந்தேக நபர் ஏழு பாக்கெட்டுகளில் ஹெராயின் விற்கத் தயாரானபோது இவ்வாரு கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் மற்றும் ஹெராயின் ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக முந்தலம போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.