கடலாமை இறைச்சியுடன் ஒரு பெண் கைது

கடற்படை மற்றும் பொலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைந்து யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் இன்று (2019 அக்டோபர் 09) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடலாமை இறைச்சியுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.

அதன் படி, வடக்கு கடற்படை கட்டளை மற்றும் இல்லவாலை பொலிஸார் ஒருங்கிணைந்து நடத்திய தேடலின் போது யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 38.8 கிலோ கிராம் கடலாமை இறைச்சியுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பெண் 49 வயதுடைய அப்பகுதியில் வசிப்பவல் என கண்டரியப்பட்டது.

கைது செய்யப்பட்ட பெண் மற்றும் கடலாமை இறைச்சி குறித்து மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொள்கின்றனர். இதேபோன்ற நெடுந்தீவு, மனலடி பகுதியில் கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 16.1 கிலோ கிராம் கடலாமை இறைச்சியுடன் 04 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆபத்தான உயிரினங்களின் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த கடலாமை ஆமைகளைப் பாதுகாப்பது இலங்கையில் உள்ள நம் அனைவரின் பொறுப்பாகும்.