போதைப் பொருள் வைத்திருந்த இருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர்பர் 09 ஆம் திகதி முலங்காவில், அம்பபுரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் இரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

அதன்படி, முலங்காவில், அம்பபுரம் பகுதியில் வட மேற்கு கடற்படை கட்டளை மற்றும் முலங்காவில் பொலிஸார் நடத்திய கூட்டு சோதனையின் போது பாதையில் சென்ற சந்தேகத்திற்கிடமான இருவர் கண்கானிக்கப்பட்டதுடன் மேலும் மேற்கொன்டுள்ள விசாரனையின் போது இவர்களிடமிருந்து 22.56 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது அதன் பின் குறித்த சந்தேக நபரைகளை கைது செய்யப்பட்டன. அவர்கள் 33 வயதான முலங்காவில் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் மற்றும் கேரள கஞ்சா பற்றிய மேலதிக விசாரணைகளை முலாங்கவில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் உடைமைகளைத் தடுக்க கடற்படை ஏற்கனவே பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது.