இறால் பண்ணையில் சிக்கிய கடலாமையை கடற்படை மீட்டுள்ளது

மண்டதீவு, பல்லிக்குடா பகுதியில் உள்ள ஒரு இறால் பண்ணையில் சிக்கிய கடலாமையை 2019 அக்டோபர் 9 அன்று கடற்படை மீட்டது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை நடத்திய கால் ரோந்துப் பணியின் போது, மண்டதீவு, பல்லிக்குடா பகுதியில் உள்ள இறால் பண்ணையில் சிக்கிகொண்டுருந்த ஒரு கடலாமையை கண்டுபிடிக்கப்பட்டதுடன் உடனடியாக கடற்படையால் கடலாமையை மீட்கப்பட்டது. பின்னர் கடற்படை ஆமையை பாதுகாப்பாக கடலுக்குள் விடுவித்தது.

மேலும், ஏழு வகையான கடலாமைகள் ஆபத்தானவை என பட்டியலிடப்பட்டுள்ளன, அவற்றில் ஐந்து வகை இலங்கை கடற்கரையில் காணப்படுகின்றன. ஆபத்தான உயிரினங்களைப் பாதுகாக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் தொலைநோக்கு கருத்தாக்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட ‘நீல ஹரித சங்கிராமய’, மூலம் கடலாமையை பாதுகாப்பில் கடற்படை வீரர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.