பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர் அதிமேதகு கலாநிதி ஷாஹித் அகமது ஹாஷ்மத் அவர்கள் 2019 அக்டோபர் 09 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்களை கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இங்கு ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க உயர் ஸ்தானிகரை அன்புடன் வரவேற்றார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.