சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 15 நபர்கள் கடற்படையினரால் கைது

During routine patrols conducted in the sea areas of Palliyawasalapadu and Kallaru, the Navy held 15 persons for engaging in illegal fishing activates on 10th October 2019.

பல்லியவாசலபடு மற்றும் கல்லாரு கடல் பகுதிகளில் வழக்கமான ரோந்து நடவடிக்கைகளின் போது, 2019 அக்டோபர் 10 ஆம் திகதி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கடற்படை 15 நபர்களை கைது செய்ததுள்ளது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளை மூலம், பல்லியவாசலபாடு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் நடவடிக்கைகளின் போது, செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்களை கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் 29 முதல் 42 வயது வரையிலான கல்பிட்டியாவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய இரண்டு (02) டிங்கி மற்றும் 02 வெளிப்புற மோட்டார்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.கைது செய்யப்பட்ட நபர்கள் மீன்பிடி கருவிகளுடன் புத்தளத்தின் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், கள்ளரு கடல் பகுதியில் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த 10 நபர்கள், வடமேற்கு கடற்படை கட்டளையால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 30 முதல் 43 வயது வரையிலான வலத்தோட்டம் மற்றும் கல்பிட்டியாவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தவிர 02 டிங்கிகள், 02 வெளிப்புற மோட்டார்கள், 1,300 கிலோ சட்டவிரோதமாக பிடிபட்ட மீன்கள் மற்றும் 02 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேக நபர்கள் மீன் மற்றும் பிற மீன்பிடி சாதனங்களுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.