கடற்படையால் வக்வெல்ல பாலத்தின் கீழ் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டது

இலங்கை கடற்படை இன்று (ஆக்டோபர் 11) வக்வெல்ல பாலத்தின் கீழ் இருந்த கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

அதன்படி, ஜின் ஆற்றின் குறுக்கே உள்ள வாக்வெல்ல பாலத்தில் பெரிதும் கழிவுகள் சிக்கியதால் ஆற்றின் கரையில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயத்தில் உள்ளதுடன், இதன் விளைவாக கழிவுகளை விரைவாக அகற்றவும், தண்ணீரை சுதந்திரமாக ஓடவும் கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

தெற்கு கடற்படை கட்டளை ஒரு டைவிங் குழுவினரை இந்த நடவடிக்கைக்கு இணைத்தது, மேலும் அவர்கள் குப்பைகளை அகற்றி வழக்கமான நிலமைக்கு ஆற்றை கொண்டு வந்தனர்.