கடற்படையினரால் செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சங்கு கடத்தியதாக மூன்று சந்தேக நபர்கள் கைது

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்), அக்டோபர் 11, 2019 அன்று, யாழ்ப்பாணத்தின் அம்பிகா நகரில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, முறையான அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சங்கு கடத்திய மூன்று நபர்களை கைது செய்தன.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை மற்றும் யாழ்ப்பாண சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்), யாழ்ப்பாணத்தின் அம்பிகா நகர் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான டிங்கி கப்பலை கண்டுபிடித்துள்ளதுடன் அங்கு 560 சிப்பிகளைக் மீட்க்கப்பட்டுள்ளனர். சிப்பிகளைகொண்டு செல்வதற்கும் வைத்திருப்பதற்கும் சரியான அனுமதி பத்திரங்கள் அவர்களிடம் காணப்படாததால் கைது செய்யப்ப்ட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 31, 34 மற்றும் 40 வயதுடைய வேலனி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் யாழ்ப்பாண உதவி மீன்வழ இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.