கடற்படையினரால் சட்டவிரோத கடல் அட்டைகளுடன் மூன்று நபர்கள் கைது

இன்று (12 அக்டோபர் 2019) காலை மன்னாரில் உள்ள சவுத்பார் பகுதியில் 55 கடல் அட்டைகளுடன் மூன்று நபர்களை கடற்படை கைது செய்தது.

வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய ரோந்து நடவடுக்கையின் போது, அனுமதி இல்லாமல் சேகரிக்கப்பட்ட இந்த கடல் அட்டைகள் கைது செய்யப்பட்டது. ஒரு டிங்கி, ஒரு ஓபிஎம் மற்றும் 05 ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் கடற்படை காவலில் வைக்கப்பட்டன.

சந்தேகநபர்கள் 25, 27 மற்றும் 28 வயதுடைய மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாலம் காணப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள், டிங்கி, ஓபிஎம், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் பிற மீன்பிடி கியர்கள் மன்னாரில் உள்ள மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.