அடிப்படை பயிற்சி பெற்ற விரைவு நடவடிக்கை படகு படை அதிகாரிகளின் மற்றும் வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு

கடற்படை விரைவு நடவடிக்கை படகு படையின் 24 ஆம் ஆட்சேர்ப்பில் 06 அதிகாரிகள் மற்றும் 43 வீர்ர்கள் அவர்களுடய அடிப்படை பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்திசெய்து 2019 அக்டோபர் 17 கங்கைவாடிய விரைவு நடவடிக்கை படகு படை தலைமையகத்தில் வெளியேறிச் சென்றனர். இந்த வெளியேறல் மற்றும் அறிமுக அட்டைகள் அணித்தல் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கழந்து கொன்டார்.

ஆறு மாத காலப்பகுதியில் இந்த பயிற்சி நடத்தப்பட்டதுடன் போரின் போது சிறிய படகுகள் என்ற கருத்தை பின்பற்றி, செட்ரிக் படகுகளால் எதிரி மீது பாரிய தாக்குதலை நடத்துவதே இப் பயிற்சியின் முக்கிய நோக்கமானது. அதே போன்ற அவசர மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வழங்க பயிற்சி திட்டங்களும் நடத்தப்பட்டன.

இப் பயிற்சியின் போது சிறந்த வீரர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதள் வழங்கப்பட்டன. அதன் படி சிறந்த பயிற்சியாளருக்கான விருது லெப்டினன்ட் எச்.எம்.எஸ்சி.பி ராஜபக்‌ஷ பெற்றுள்ளார். சிறந்த படகுகள் கையாளுபவருக்கான விருது கடற்படை வீர்ர் ஆர்.எச்.எச். பி ராஜகருனா பெற்றுள்ளார். சிறந்த உடல் தகுதியுள்ள பயிற்சியாளர் மற்றும் சிறந்த மெய்க்காப்பாளர் விருது கடற்படை வீர்ர் எச்.எச்.டி.எஸ் ஹேரத் பெற்றுள்ளார்.

இந் நிகழ்வுக்காக வட மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா, விரைவு நடவடிக்கை படகு படை தலைமையகத்தில் கட்டளை அதிகாரி கொமான்டர் கோனாட் அந்னதுகொட உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வெளியேறும் கடற்படை உறுபினரின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொன்டனர்.