‘SPEAR’ கூட்டுப் பயிற்சி பற்றிய கலந்துரையாடல் தெற்கு கடற்படை கட்டளையில்

ஐக்கிய இராச்சியத்தின் கூட்டு கடல் தலைமையகம் மற்றும் இலங்கை கடற்படை இனைந்து அவசர காலங்களில் மனிதாபிமான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள ‘SPEAR’ கடற்படை பயிற்சி குறித்த பூர்வாங்க கலந்துரையாடல் 2019 அக்டோபர் 28 அன்று தெற்கு கடற்படை கட்டளை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அதன் படி தெற்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி கொமடோர் அருண தனபால தலைமை தாங்கிய இந்த கூட்டத்திற்கு ஐக்கிய இராச்சியத்தின் கூட்டு இராணுவத் தலைமையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விங் கமாண்டர் பாரட் (Barratt) உள்ளிட்ட தூதுக்குழுவும் கழந்துகொண்டனர்.

இங்கு தெற்கு கட்டளையின் வள திறன்கள் மற்றும் மீட்பு நிவாரணப் பயிற்சிகளுக்கான திறன்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது, மேலும் பேரழிவு ஏற்பட்டால் தெற்கு கட்டளையின் பங்களிப்பு இங்கிலாந்து தூதுக்குழுவினால் சிறப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்காக இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி தெற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட பல மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கலந்துரையாடலின் பின்னர் தூதுக்குழு காலி துறைமுகத்தையும் பார்வையிட்டது.