மோசமான வானிலை காரணத்தினால் பாதிக்கப்பட்ட தெற்கு மாகாண மக்களுக்கு கடற்படை ஆதரவு

மோசமான வானிலை காரணமாக தெற்கு மாகாணத்தின் பல பகுதிகளில் நிவாரண குழுக்களை அமைக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இந்த நாட்களில் பலத்த மழை காரணமாக தாங்காலையில் ரன்ன பகுதி வழியாக நிரம்பி வழியும் உருபோக்க ஓய, சதுப்பு வாயில்களின் கழிவுகள் சிக்கிய காரணத்தினால் தண்ணீர் ஓட்டம் தடுக்கப்பட்டுள்ளது. மேலும், காலி கின் ஆற்றின் குறுக்கே உள்ள வாக்வெல்ல பாலம் குப்பைகளால் தடுக்கப்பட்டுள்ளதுடன் ஆற்றின் இருபுறமும் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயத்தில் உள்ளனர். இதன் விளைவாக, பேரழிவுக்கு முன்னர் கழிவுகளை உடனடியாக வெளியேற்றுவதற்காக கடற்படை தெற்கு கடற்படையில் இணைக்கப்பட்ட சுழியோடி குழுவை உருபொக்க ஓயவுக்கும் கடற்படை மரையின் படையின் குழு வக்வெல்லை பாலத்திற்கும் இன்று (2019அக்டோபர் 30,) அனுப்பப்பட்டது.

அங்கு கடற்படையின் நிவாரண குழுக்கள் விரைவாக கழிவுகளை அப்புறப்படுத்தி, நீர் ஓடச் செய்தன. மேலும், இந்த நாட்களில் அவ்வப்போது பெய்யும் மழையுடன் எதிர்கால அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு முன்னெச்சரிக்கையாக தெற்கு மாகாணத்தின் தவலம, நெலுவ, அக்குரெஸ்ஸ, ஹங்கம மற்றும் கம்புருபிட்டி பகுதிகளில் உள்ள கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவு (4RU) மற்றும் சுழியோடி பிரிவில் மாலுமிகள் அடங்கிய பல நிவாரண குழுக்கள் இணைக்கப்பட்டுள்ளன.


Removing debris underside Wakwella bridge


Opening the sluice gates in Urubokka Oya


Providing transportation by the Navy