கேரள கஞ்சாவுடன் போதைப்பொருள் கடத்தல் காரர் கடற்படையினரால் கைது

கடற்படையால் 2019 அக்டோபர் 30 ஆம் திகதி சுண்டிகுளம் பகுதியில் 25.9 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை மூலம் சுண்டிகுளத்திற்கு அருகில் உள்ள கடலில் நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகொன்று கண்கானிக்கப்பட்டது. படகில் இருந்த சந்தேக நபரை விசாரிக்கும் போது சுண்டிகுளம் பகுதியில் ஒரு காட்டில் மறைத்துவைக்கப்பட்ட கஞ்சா மீட்க முடிந்தது. அங்கு 12 பொட்டலங்களில் அடுக்கப்பட்ட 25.9 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் இவை கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், மேற்கொண்டுள்ள விசாரணையின் போது சந்தேகநபர் சட்டவிரோத கேரளா கஞ்சா இலங்கைக்கு கொண்டு வருகின்ற கடத்தல் காரர் என்பது தெரியவந்துள்ளது.மேலும் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபர், படகு, பிற பொருட்கள் மற்றும் கேரள கஞ்சா ஆகியவை பலெய் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.