இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் அதி மேதகு டேவிட் ஹோலி (David Holly) அவர்கள் இன்று (நவம்பர் 07) தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.

அதன்படி, இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளரை தெற்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி அனுர தனபால அன்புடன் வரவேற்றார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக இலங்கயின் ஆஸ்திரேலிய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகரான க்ரூப் கேப்டன் ஷோன் அன்வின் அவர்களும் கழந்துகொன்டுள்ளார்.