904.6 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) நபர்கள் கடற்படையால் கைது

தலைமன்னர் கலங்கரை விளக்கத்தின் வடக்கு கடல் பகுதியில் 21 பொட்டலங்களில் வைக்கப்பட்டுள்ள 904.6 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை இன்று (நவம்பர் 08) கண்டுபிடித்தது.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை தலைமன்னர் கலங்கரை விளக்கத்தின் வடக்கு கடல் பகுதியில் நடத்திய ரோந்துப்பணியின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன், மேலும் குறித்த படகு சோதனை செய்த போது இந்த பி.டி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. 21 பொட்டலங்களில் வைக்கப்பட்டுள்ள 904.6 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு நபர்களும் ஒரு டிங்கி படகும் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேக நபர்கள் 33 வயதான மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் எனக் கூறப்படுகிறது, இவர்கள் டிங்கி படகு, பீடி இலைகள் பொதி மற்றும் மீன்பிடி உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.