இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2019 நவம்பர் 09 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் கைது செய்தது.

வடக்கு கடற்படை மூலம் கோவிலம் துடுவைக்கு வட மேற்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, இலங்கை பிராந்திய கடலில் சட்டவீரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்த இந்திய மீனவர்களை கைது செய்யப்பட்டன. அதன் படி கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட படகு இலங்கை கடற்படை கப்பல் ‘எலார’ நிருவனத்திக்கும் மீனவர்களை இலங்கை கடற்படை கப்பல் ‘உத்தர’ நிருவனத்திக்கும் கொண்டுவரப்பட்டன.

அங்கு கைது செய்யப்பட்ட மீனவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் யாழ்ப்பாணம் உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்க எதிர்பார்க்கப்படுகிறது.