நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது

2019 நவம்பர் 08 ஆம் திகதி பெஹெம்பிய பகுதியில் கடலில் காணாமல் போன இளைஞனின் சடலத்தை கடற்படை கண்டுபிடித்தது.

பெஹெம்பிய கடலில் நீரில் மூழ்கி இறந்த ஒருவரைக் கண்டுபிடிக்க கடற்படையின் உதவி தெவை என்று திக்வெல்ல காவல்துறை கடற்படைக்கு தெரிவித்த பின் தெற்கு கடற்படை கட்டளையின் சுழியோடி வீரர்கள் உடனடியாக பொருத்தமான இடத்திற்கு முன்னோக்கி செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடற்படை சுழியோடி வீரர்களினால் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டு, உடலை மேலதிக விசாரணைகளுக்காக திக்வெல்ல காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.