கடற்படை சிறப்பு படகு படை தனது 26 வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் சிறப்பு படகுப் படை தனது 26 வது ஆண்டு விழாவை 2019 நவம்பர் 9 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் கொண்டாடியது.

அதன் படி, மத சடங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து தர்ம விரிவுரையும் அடுத்த நாள் காலை மதிப்பிற்குரிய துறவிகள் 30 பேருக்கு தானம் மற்றும் பிரிகர வழங்கப்பட்டது. அதன் பின் தாயகத்தைப் பாதுகாப்பதற்காக தனது உயிரை தியாகம் செய்த சிறப்பு படகு படையின் வீர்ர்கள் நினைவு செய்தல் வீரர்கள் நினைவுச்சின்னம் அருகில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் தாயகத்தைப் பாதுகாப்பதற்காக தனது உயிரை தியாகம் செய்த வீர்ர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.

இன் நிகவுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க உட்பட பல அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.