அங்கீகரிக்கப்படாத குடியேறியவர்கள் எட்டு பேர் (08) கடற்படையால் கைது

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 08 இலங்கை நபர்கள் இன்று (நவம்பர் 08) காலை தலைமன்னார் வெலிபர பகுதியில் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயன்ற (08) தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாரு கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன் கடற்படையின் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக சட்டவிரோத குடியேறியவர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் கைது செய்ய கடற்படையால் முடிந்தது.