1113 கிலோ கிராம் பீடி இலைகளைக் கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

கடற்படையால் இன்று (நவம்பர் 11) இரணமாதாநகர் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 1113 கிலோ கிராம் பீடி இலைகளைக் கொண்ட இரண்டு நபர்கள் கைது செய்ய்ப்பட்டனர்.

அதன்படி, இரணமாதாநகர் பகுதியில் வட மத்திய கடற்படை கட்டளை மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது, டிங்கி படகுகள் மூலம் கரைக் கொண்டு வர முயற்சித்த 30 பீடி இலை பொதிகள் கடற்படை கைப்பற்றியது. இதனுடன் இரண்டு நபர்கள், இரண்டு டிங்கி படகுகள் மற்றும் இரண்டு வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள் கடற்படையினரால் கைது செய்ய்ப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள் பெசலாயில் வசிப்பவர்கள் எனக் கூறப்படுகிறது.அவர்கள் மற்றும் கைப்பற்றிய பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

மேலும், இதுபோன்ற சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதன் விளைவாக ஏராளமான கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.