873 கிலோகிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் கடற்படையால் கைது

தலைமன்னார் கலங்கரை விளக்கத்தின் தெற்கு மற்றும் மேற்கு கடல்களுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் 2019 நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் 873 கிலோகிராம் பீடி இலைகளுடன் மூன்று பேரை (03) கடற்படை கைது செய்துள்ளது.

அதன்படி, தலைமன்னார் கலங்கரை விளக்கத்திற்கு தெற்கு கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கை மேற்கொண்ட போது சந்தேகத்திற்குரிய ஒரு டிங்கி படகை வட மத்திய கடற்படை கட்டளை கவனித்தது. குறித்த படகை மெலும் ஆய்வு செய்யப்பட்ட போது ஒன்பது பொட்டலங்கள் கடலில் வீசி தப்பி ஓட முயன்ற மூன்று நபர்களுடன் டிங்கி படகை கடற்படையால் கைது செய்யப்பட்டன. கடலில் வீசப்பட்ட பொட்டலங்கள் மேலும் ஆய்வு செய்யும் போது 368 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள் மன்னார் பகுதியில் வசிக்கும் 28 முதல் 33 வயதுடையவர்கள் என கூறப்படுகிறது.

தலைமன்னார் கலங்கரை விளக்கத்தின் மேற்கு பகுதி உள்ளடக்கி மேலும் மேற்கொன்டுள்ள தேடல்களில் கடலில் மிதக்கும் 10 பொட்டலங்களில் 505 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாரு கைது செய்யப்பட்ட பீடி இலைகள் பொதி, சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி படகு மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், இதுபோன்ற சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதன் விளைவாக ஏராளமான கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.