இலங்கை கடற்படை சிஸ்கோ நெட்வர்க்கிங் அகாடமி (CISCO Networking Academy) நிரலுடன் கைகோர்த்தது

இணைய வடிவமைக்கவும், கட்டமைக்கவும் மற்றும் பராமரிக்க தேவையான திறன்களும் அறிவும் உள்ள மக்களுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சியாக, சிஸ்கோ (CISCO) நிறுவனம் உலகளவில் சிஸ்கோ நெட்வர்க்கிங் அகாடமி (CISCO Networking Academy) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்துடன் இலங்கை கடற்படை கைகோர்த்து 2019 நவம்பர் 6 ஆம் திகதி இங்கிலாந்தின் சிஸ்கோ (CISCO) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பணிப்பாளர் நாயகம் மின் மற்றும் மின்னணு ரியர் அட்மிரல் நிஷாந்த சமரசிங்ஹ, மற்றும் சிஸ்கோ (CISCO) நிறுவனம் சார்பாக ஆசியா, பசுபிக், ஜப்பான், ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு மண்டல இயக்குநர் பியோடர் செனன் ப்லூடா அகியோர் கையெழுத்திட்டனர்.மேலும் இந் நிகழ்வுக்காக சிஸ்கோ (CISCO) நிறுவனம் பிரதிநிதித்துவப்படுத்தி இயக்குநர் மேலாண்மை நிதி திரு. கிறிஸ்டோஸ் மார்க்ஸ் வாட்டர்ஸ், அதன் தெற்காசிய பிராந்திய மேலாளர் முருகன் வாசுதேவன் மற்றும் சார்க் பிராந்திய திட்ட மேலாளர் திருமதி கல்ஹாரி களுராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த திட்டம் கடற்படைக்குள் தகவல் தொழில்நுட்ப தேவைகள், இணைய பாதுகாப்பு தேவைகள், ஒன்றோடொன்று இணைப்பு மற்றும் பல தொழில்நுட்ப பயிற்சி திட்டங்களை பெற கடற்படைக்கு உதவவும், இது கடற்படையின் இளம் பொறியியளாலர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் தொழில் திறனை மேம்படுத்தும்.