16 வது ஆட்சேர்ப்பின் தொழில்நுட்ப பிரிவு கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர கடற்படையின் 16 வது ஆட்சேர்ப்பு தொழில்நுட்ப பிரிவின் 37 கடற்படை வீரர்கள் தனது அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2019 நவம்பர் 13 ஆம் திகதி வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிலா நிறுவனத்தில் இடம்பெற்ற அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிலா நிருவனத்தின் கீழ் பராமரிக்கப்படுகின்ற கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் குறித்த அணிவகுப்பு வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கடற்படை பணிப்பாளர் நாயகம் (பணியாளர்) ரியர் அட்மிரல் முதித கமகே பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

மேலும், அடிப்படை பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகளும் சான்றிதள்களும் வழங்கப்பட்டன. அங்கு 16 வது ஆட்சேர்ப்பின் சிறந்த பயிட்சியாளருக்கான விருதை டீ.எச் பிரபுத்த பெற்றார் கே.ஏ.டி.எச் ஜயகொடி சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றதுடன் எம்.டப்.ஏ ஷேஹான் அபேசிங்க சிறந்த விளையாட்டு போட்டியாளர்கலுக்கான விருதை வென்றார்.

ஒரு வண்ணமயமான கலாச்சார நிகழ்வுகள் கொன்டுள்ள குறித்த அணிவகுப்புக்காக கடற்படை தலைமையகத்தின் மூத்த மற்றும் இளநிலை உத்தியோகத்தர்கள், முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகள், பயிற்சி முடித்து வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினரும் கலந்துக்கொண்டனர்.