சர்வதேச தேரவாதி தர்ம நிருவனத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது

கடற்படையால் ஆனமடுவ, கருவலகஸ்வெவ பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று (2019 நவம்பர் 15) ஆயுதப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்காக மகா சங்கத்தினர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, இராணுவத் தளபதி உட்பட மாநில அதிகாரிகள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் கலந்து கொண்டனர்.

ஆனமடுவ, கருவலகஸ்வெவ பிரதேச செயலக பிரிவில் ஹினடிகல்ம அமைந்துள்ள சர்வதேச தேரவாதி தர்ம நிருவனத்திக்கு வரும் ஏராளமான பக்தர்களின் சுத்தமான குடிநீர் தேவையை இந்த சுத்திகரிப்பு நிலையம் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, சிறுநீரக நோயைத் தடுப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழு மற்றும் பல்வேறு பரோபகாரர்களால் கடற்படையின் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப அறிவு ஆகியவை பயன்படுத்தி இலங்கையின் பல மாவட்டங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளன.

அதன்படி, சிறுநீரக நோயைத் தடுக்கும் ஜனாதிபதி பணிக்குழு மற்றும் இலங்கை கடற்படை ஆகியவை எதிர்காலத்தில் சிறுநீரக நோய் பரவும் மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இதே போன்ற பல நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவுவதில் ஈடுபட்டுள்ளன.