கடற்படை நடவடிக்கையின் போது 03 நீர் ஜெல் குச்சிகள் மீட்பு

கடற்படையால் 2019 நவம்பர் 15 ஆம் திகதி நிலாவெலி நவச்சோலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கிழக்கு கடற்படை கட்டளை மூலம் நிலாவெலி நவச்சோலை கடற்கரையில் தேடுதல் நடவடிக்கை யொன்று மேற்கொண்டபோது, கடற்கரையில் ஒரு பாறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பல வெடிபொருட்களைக் கண்டுபிடித்தது.

அங்கு 03 நீர் ஜெல் குச்சிகள் 04 மின்சாரமற்ற டெட்டனேட்டர்கள் மற்றும் 02 பாதுகாப்பு வெடி நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த வெடிபொருட்களை கடற்படை காவலில் வைக்கப்பட்டன.