14.5 கிலோ கிராம் கடல் ஆமை இறைச்சியுடன் 02 நபர்களை கடற்படையினால் கைது

இன்று (20 நவம்பர் 2019) மன்னாரின் சவுத்பாரின் கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது, 14.5 கிலோ கிராம் கடல் ஆமை இறைச்சியுடன் 02 நபர்களை கடற்படை கைது செய்தது.

வட மத்திய கடற்படை கட்டளை சவுத்பார் கடற்கரையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு படகு கரைக்கு திரும்புவதைக் கண்டதுடன், இந்த கடல் ஆமை இறைச்சியை கண்டுபிடித்ததுள்ளது. இதையடுத்து, சந்தேக நபர்கள் இருவரையும் அவர்களது மீன்பிடிக் கப்பலுடன் கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் மன்னாரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீன்பிடிக் கப்பல் மற்றும் ஆமை இறைச்சி ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மன்னார் உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைத்தனர்.

மனித நடவடிக்கைகளால் அச்சுறுத்தல் அல்லது ஆபத்தானவை என வகைப்படுத்தப்பட்ட கடல் ஆமைகளைப் பாதுகாக்க இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனவே, இந்த வகை கடல் விலங்குகளை பாதுகாப்பது மனிதகுலத்தின் கூட்டுப் பொறுப்பாகும்.