தலைமன்னார் கலங்கரை விளக்கம் கடல் பகுதியில் கேரளா கஞ்சா பொதியொன்று கடற்படையால் கைது

2019 நவம்பர் 27 அன்று தலைமன்னார் கலங்கரை விளக்கம் கடல் பகுதியில் ரோந்து சென்றபோது சுமார் 80 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படை கைப்பற்றியது.

தலைமன்னார் கலங்கரை விளக்கம் கடல் பகுதியில் ரோந்து சென்றபோது, கடற்படையினரால் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று கண்கானிக்கப்பட்டதுடன் குறித்த படகு மற்றும் அங்கு பயணம் செய்த இரண்டு பேர் மேலும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்.

பின்னர் குறித்த கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள மேலதிக சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான நான்கு பொட்டலங்கள் கடலில் மிதந்து கிடந்தன. இந்த பொதிகள் பரிசோதனைக்கு உற்பத்திய பின் கிட்டத்தட்ட 80 கிலோகிராம் கேரள கஞ்சாவை மீட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள், 36 மற்றும் 39 வயதுடைய பேசாலை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், குறித்த நபர்கள், கேரள கஞ்சா பொதி மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இருப்பினும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கும் கண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சாவுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று கண்டறிய கடற்படையால் மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.

இலங்கை கடற்படையின் கடலோரப் பகுதிக்கு வெளியேயும் இலங்கையின் பிராந்திய கடல் பகுதிகளிலும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலின் இந்த தன்மை தவிர்க்கப்பட்டு வருகின்றது.