ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலில் சட்டவிரோதமாக இரும்பு கடத்திய இருவர் கடற்படையால் கைது

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக அதிவேக நெடுஞ்சாலை வளாகத்தில் 2019 நவம்பர் 27 ஆம் திகதி இரும்பு கடத்தி வந்த இரண்டு சந்தேக நபர்களை கடற்படை கைது செய்துள்ளது.

அதன்படி, கடற்படை நடத்திய கால் ரோந்துப்பணியின் போது ஹம்பன்டோட்டை சர்வதேச துறைமுகத்தின் நெடுஞ்சாலை நுழைவாயிலில் சந்தேகத்திற்கிடமான சிறிய லாரி மற்றும் மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்யப்பட்டன அங்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட 55 கிலோகிராம் சட்டவிரோத இரும்பு கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் மேற்கொண்டுள்ள விசாரணையில், மோட்டார் சைக்கிள் மற்றும் லாரிவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள், 20 மற்றும் 27 வயதுடைய ஹம்பாந்தோட்டை பகுதியில் வசிப்பவர்கள் என கண்டறியப்பட்டனர் , சந்தெகநபர்கள், மோட்டார் சைக்கிள், லாரி மற்றும் இரும்பு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.