05 ரவைகள் மற்றும் கேரள கஞ்சாவை வைத்திருந்த ஐந்து பேர் கடற்படையால் கைது

இன்று (2019 நவம்பர் 29) அதிகாலையில் 05 ரவைகள் மற்றும் 3.910 கிராம் கேரள கஞ்சாவுடன் ஐந்து சந்தேக நபர்களை கடற்படை மற்றும் புத்மலம் போலீசார் இனைந்து கைது செய்துள்ளனர்.

கடற்படை மற்றும் புத்தலம் பொலிஸார் இனைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் ஐந்து பேரை கண்காணிக்கப்பட்டதுடன் அங்கு மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனையில்,இவர்களிடமிருந்து 05 ரவைகள் மற்றும் 3.910 கிராம் கேரள கஞ்சாவும் கிடைத்தன. சந்தேக நபர்கள் கடற்படை காவலில் வைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் புத்தலம் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், ரவைகள் மற்றும் கேரள கஞ்சாவை மேலதிக விசாரணைகளுக்காக புத்தலம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.