500 லிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் இரண்டு பேர் கைது

உள்ளூர் மதுபானம் கொண்ட இரண்டு (02) நபர்களை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 நவம்பர் 29 ஆம் திகதி காலி அம்பலந்வத்த பகுதியில் வைத்து கைது செய்துள்ளன.

காலி அம்பலந்வத்த பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு நடத்திய சோதனையின்போது ஒரு வீட்டின் அருகே உள்ள இந்த சட்டவிரோத மதுபானம் உற்பத்தி நிலையம் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு தயாரிக்க்பட்ட சுமார் 500 லிட்டர் உள்ளூர் மதுபானங்கள் மீட்கப்பட்டுள்ளன. சட்டவிரோத மதுபானம் தயாரிப்பது தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இங்கு ஒரு பிளாஸ்டிக் கேன் மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சில உபகரணங்களையும் போலீசார் மீட்டனர்.

குறித்த சந்தேக நபர்கள், உள்ளூர் மதுபானம் மற்றும் பிற உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.