ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

இன்று (2019 நவம்பர் 30) காலை மன்னார், ஊருமலை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர்கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

கடற்படை மன்னார், ஊருமலை கடற்கரை பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒருவரையும் அவருடைய படகும் பரிசோதித்த பொது படகில் வலைகளுக்குள் இருந்து 680 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு சந்தேகநபருடன் குறித்த படகு கைது செய்யப்பட்டது.

மேலதிக விசாரணையில் சந்தேகநபர் மன்னார் ஊருமலை பகுதியில் வசிப்பவர் என்றும், அப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரி என்றும் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர், படகு மற்றும் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.