கட்டளைகளுக்கிடையிலான ஆண் மற்றும் பெண் கூடைப்பந்து போட்டிதொடரில் வெற்றி மேற்கு கடற்படை கட்டளைக்கு

2019 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கூடைப்பந்து போட்டித்தொடர் இலங்கை கடற்படைக் கப்பல் 'கெமுனு' நிருவனத்தில் நவம்பர் 25 முதல் 2019 டிசம்பர் 1 வரை நடைபெற்றது, இப் போட்டித்தொடரில் பரிசு வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கலந்து கொண்டார்.

இந்த போட்டித்தொடருக்காக அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி ஒன்பது ஆண் அணிகள் மற்றும் ஆறு பெண் அணிகள் பங்கேற்றன. இங்கு கடற்படை கொடி கட்டளைக்கும் மேற்கு கடற்படை கட்டளைக்கும் இடையிலான (ஆண்கள்) இறுதிப் போட்டியில் மேற்கு கடற்படை கட்டளை கூடைப்பந்து அணி 48-36 புள்ளிகளால் வெற்றி பெற்றது.

கடற்படை பயிற்சி கட்டளைக்கும் மேற்கு கடற்படை கட்டளைக்கும் இடையிலான (பெண்கள்) இறுதிப் போட்டியில் மேற்கு கடற்படை கட்டளை கூடைப்பந்து அணி 11-04 புள்ளிகளால் வெற்றி பெற்றது. மேலும் ஆண்கள் கூடைப்பந்து போட்டித்தொடரில் மூன்றாம் இடத்தை வட மத்திய கட்டளை பெற்றுள்ளதுடன் பெண்கள் கூடைப்பந்து போட்டித்தொடரில் மூன்றாம் இடத்தை வடக்கு கட்டளை பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் நிலந்த ஹீனட்டிகல உட்பட அனைத்து கடற்படை கட்டளைகளிலும் பல கடற்படையினர் கலந்து கொண்டனர்.