கடல் வழியாக போதைப் பொருட்கள் கொண்டு செல்ல முயன்ற நபர் கடற்படையால் கைது

2019 டிசம்பர் 02 ஆம் திகதி கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, 1.6 கிலோ கேரளா கஞ்சா கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நாட்டிலிருந்து போதைப் பொருளை அகற்றும் தேசிய தேவைக்காக கடற்படை மேற்கொண்ட நடவடிக்கையின் போது மோதரை முதுவெல்ல கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி காணப்பட்டது. குறித்த படகை பரிசோதித்த போது இந்த கேரள கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு மேற்கொண்டுள்ள மேலதிக விசாரணையில், சந்தேக நபர் ஒரு போதைப்பொருள் வியாபாரி மற்றும் இந்த கேரள கஞ்சா கடல் வழியாக கொண்டு செல்ல தயாராக இருந்ததாக தெரியவந்தது.

குறித்த சந்தேக நபர் இரத்மலானை பகுதியில் வசிக்கின்ற 46 வயதானவராக கண்டரியப்பட்டதுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மோதரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.