மோசமான வானிலை குறித்து கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

இந்த நாட்களில் பெய்யும் மழையால் எதிர்கால அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண குழுக்களை நிறுவ இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

இயற்கை பேரழிவுகளைச் சமாளிக்க சிறந்த பயிற்சி பெற்ற கடற்படை மரைன் படையணி, கடற்படை விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவு (4RU), சிறப்பு படகு படை, மற்றும் கடற்படை சுழியோடி பிரிவு ஆகிய பிரிவுகள் தயாராக உள்ளனர். இப்பொது வாக்கரை கிராஞ்சி பகுதிக்கு கடற்படை நிவாரண குழு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன.

இது தவிர, கடந்த சில நாட்களில் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் சேர்ந்து தண்ணீர் ஓட்டம் தடுக்கபட்ட பல பாலங்கள், கால்வாய்கள் மற்றும் கல்வெட்டுகளை சுத்தம் செய்யப்பட்டது.

மேலும் நாட்டின் ஏற்படும் எந்த பேரழிவு சூழ்நிலையிலும் மக்களுக்கு உதவி வழங்க கடற்படை தயாராக உள்ளது.