வெற்றிகரமான சுற்றுப்பயணத்திற்குப் பின் இந்திய கடற்படைக் கப்பல் ‘நிரீக்ஷக்’ தாயகம் திரும்பியது

பயிற்சி சுற்றுப்பயணத்திற்காக 2019 நவம்பர் 25, அன்று இலங்கை வந்து சேர்ந்த இந்திய கடற்படைக் கப்பல் ‘நிரீக்ஷக்’ இன்று (2019 டிசம்பர் 03) திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதுடன் கடற்படை மரபுகளின்படி புறப்படும் கப்பலுக்கு இலங்கை கடற்படை மரியதைகளை செலுத்தியது.

இக் கப்பலின் மாலுமிகள் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர், மேலும் இக் கப்பலின் சுழியோடி வீரர்கள் இலங்கை கடற்படை சுழியோடி பிரிவின் வீரர்களுடன் இணைந்து பல பயிற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த பயிற்சி சுற்றுப்பயணம் முலம் இலங்கை மற்றும் இந்திய கடற்படைக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் அறிவு மற்றும் அனுபவங்கள் பரிமாற்றத்தை மேம்படுத்தப்பட்டது.