பாதுகாப்பு படையினரின் சீருடைகளுடன் சந்தேக நபர் கைது

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து வத்தல பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய சீருடை வைத்திருந்த ஒருவரை 2019 டிசம்பர் 03 ஆம் திகதி கைது செய்தன.

தேசிய பாதுகாப்புக்காக இலங்கை கடற்படை மற்றும் இலங்கை காவல்துறையினர் மேற்கொள்கின்ற கூட்டு நடவடிக்கைகளின் போது வத்தலை பகுதியில் உள்ள சாலைத் தடுப்புக்கு அருகில் நிர்கொழும்பில் இருந்து கொழும்புக்கு பயணித்த சந்தேகத்திற்கிடமான லாரி வண்டியொன்று கண்கானிக்கப்பட்டதுடன் குறித்த லாரி வண்டி பரிசோதனையின் போது, சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் பயன்படுத்திய சீருடைகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்தபோது, அவர் தெளிவான விளக்கங்களை வழங்கத் தவறிவிட்டார் மேலதிக விசாரணையில் சந்தேக நபர் தனது அடையாளத்தை நிரூபிக்க தேசிய அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமத்தை தயாரிக்க தவறிவிட்டார் இக் காரணத்தினால் இவரை கைது செய்யப்பட்டது.

சந்தேகநபர் கூடலுஒய பகுதியில் வசிக்கும் 23 வயதுடையவராக அடையாளம் காணப்பட்டுள்ளார், மேலும் இந்த சம்பவம் குறித்து வத்தலை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.