மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

2019 டிசம்பர் 03 ஆம் திகதி புத்தலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலவிய, உலுக்கபல்லம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூன்று நபர்களை கைது செய்ய கடற்படை ஆதரவு வழங்கியது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்ய கடற்படை மற்றும் புத்தலம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இணைந்து 2019 டிசம்பர் 03 ஆம் திகதி பாலவிய, உலுக்கபல்லம் பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்யும் போது இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். அங்கு 10 மிலி கிராம் ஐஸ் போதைப்பொருள், 740 மிலி கிராம் ஹெராயின் கண்டுபிடிக்ப்பட்டன.மேலும் மெற்கொண்டுள்ள விசாரணையில் 102 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் வீட்டில் ஒரு மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த போது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள், 26 மற்றும் 30 வயதுடைய, அப்பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், இவர்கள் இப்பகுதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என்பது மேலும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக மேலதிக சட்ட நடவடிக்கைகள் புத்தலம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் மேற்கொள்கிறது. மேலும், கடந்த சில நாட்களாக கடற்படை பல போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்துள்ளது. மேலும் கடற்படை தனது நடவடிக்கைகளைத் தொடர்கிறது மற்றும் நாட்டிலிருந்து போதைப்பொருட்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.