பாதகமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை உதவி

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை கடற்படை இப்போது நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.

இதுக்காக முழு தீவையும் உள்ளடக்கி கடற்படை கட்டளைகளில் நிவாரண குழுக்களை தயாராக்கவும் இயற்கை பேரழிவுகள் இடம்பெற்ற இடங்களுக்கு நிவாரண குழுக்களை இணைக்கவும் கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. கடற்படை மரைன் படையணி, கடற்படை விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவு (4RU), சிறப்பு படகு படை, மற்றும் கடற்படை சுழியோடி பிரிவு ஆகிய பிரிவுகளின் ஏராளமான கடற்படை வீரர்கள் குறித்த நடவடிக்கைகளுக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக, வாக்கரையின் கிரண் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்த 161 ஆண்கள், 120 பெண்கள் மற்றும் 24 குழந்தைகளை கடற்படை நிவாரண குழுக்கள் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளன. சீரற்ற வானிலை இருந்தபோதிலும் கடற்படை நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.