இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பில் இரத்ததான திட்டமொன்று நடத்தப்பட்டது

வெலிசரை கடற்படை பொது மருத்துவமனையில் 2019 டிசம்பர் 4 ஆம் திகதி கடற்படை இரத்ததான திட்டமொன்று நடத்தியது.

இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவோடு இணைந்த சமூக பொறுப்புணர்வு முயற்சிகளின் மற்றொரு கட்டமாக நோயுற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த இரத்த தான திட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் கடற்படையினர்கள், கடற்படையின் சிவில் ஊழியர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் இந் நிகழ்வில் கழந்து கொண்டனர்.

மேலும், இந்த உன்னத காரணத்திற்காக தேசிய இரத்தமாற்ற சேவை மற்றும் கடற்படை மருத்துவ பணியாளர்கள் தங்கள் முழு பங்களிப்பையும் செய்துள்ளனர்.