இந்த நாட்டிலிருந்து போதைப்பொருளை அகற்ற கடற்படை மற்றும் காவல்துறை கூட்டு நடவடிக்கை

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 04 ஆம் திகதி மேற்கொண்டுள்ள குட்டு நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிப்பதற்காக அடிக்கடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இலங்கை கடற்படை, புத்தலம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகமுடன் இனைந்து புத்தலம், சிநமன்தலுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டை ஆய்வு செய்ததில் 22 கிராம் மற்றும் 410 மில்லிகிராம் ஹெராயின் வீட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன் விட்டில் இருந்த மூன்று நபர்களை கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34, 40 மற்றும் 46 வயதுடைய மதுரங்குலிய மற்றும் செம்மாண்தலம பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மற்றும் போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக புத்தலம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தல்களில் கிழ் கடல் வழியாக மற்றும் நாட்டுக்குள் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான தேசிய பணியை கடற்படை தொடர்கிறது