சீன மக்கள் குடியரசின் இராணுவ பிரதிநிதிகள் குழு இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு

சீன மக்கள் குடியரசின் இராணுவ பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை 2019 டிசம்பர் 03 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைக்கு வந்த சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணை அரசியல் ஆணையர், மேஜர் ஜெனரல் ஷூ குபியாவோ உட்பட சீன பிரதிநிதிகள் 2019 டிசம்பர் 03 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் விஜயமொன்று மேற்கொண்டுள்ளதுடன். அங்கு மேஜர் ஜெனரல் ஷூ குபியாவோ உட்பட சீன பிரதிநிதிகள் கடற்படை தளபதியை சந்தித்தனர்.

அதன்பிறகு, கடற்படை தளபதி இலங்கை கடற்படை தலைமையகத்தில் உள்ள முக்கிய இயக்க அறை தொடர்பாக மற்றும் கடற்படையின் பங்கு குறித்து சீன பிரதிநிதிகளை விளக்கினார். இந் நிகழ்வு இலங்கை கடற்படை தலைமையகத்தின் மாநாட்டு அறையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்காக இலஙகை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் நந்தன ஜெயரத்ன மற்றும் இலங்கை கடற்படையின் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இறுதியாக, இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவு பரிசு பரிமாற்றம் நடைபெற்றது.