ரஷ்ய இராணுவ தூதுக்குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய இராணுவத்தின் தூதுக்குழு 2019 டிசம்பர் 04 அன்று கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு விஜயமொன்று மேற்கொண்டுள்ளனர்.

உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த ரஷ்ய இராணுவத்தின்ஜேருசேலேமில் இராணுவ பாதுகாப்பு கல்லூரியின் தளபதி, மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி இலினிக் உட்பட தூதுக்குழு இவ்வாரு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொண்டுள்ளனர். அங்கு மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி இலினிக் உள்ளிட்ட தூதுக்குழு கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவை சந்தித்து இருதரப்பு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்கள். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசு பரிமாற்றமும் நடைபெற்றது.

இதன் பின்னர், ரஷ்ய இராணுவத்தால் சிரியாவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அவர்கள் பெற்ற அனுபவம் குறித்து இலங்கை கடற்படை வீரர்களுக்கான விழிப்புணர்வு திட்டமொன்று மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி இலினிக் தலைமையில் திருகோணமலையில் உள்ள அட்மிரல் வசந்த கரண்னாகோட ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட துறைகளின் தலைவர்கள் உட்பட ஏராளமான கடற்படை வீரர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.