போதைப் பொருள் வைத்திருந்த ஒருவர் கடற்படையால் கைது

முத்தூர் பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த இரு சந்தேக நபரை 2019 டிசம்பர் 04 ஆம் திகதி கடற்படை முலம் கைது செய்யப்பட்டது.

இலங்கையில் போதைப்பொருள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதையும், வைத்திருப்பதையும் தடுப்பதில் இலங்கை கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மற்றொரு நடவடிக்கை முத்தூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. பாதையில் பயணித்த சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று கண்கானிக்கப்பட்டது. அங்கு மேலும் மேற்கொண்டுள்ள சோதனையின் போது 990 கிராம் கேரள கஞ்சா மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அதன் பின் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபர் கடற்படை முலம் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபர் 27 வயதான புல்மூட்டை பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர்கள் மற்றும் கேரள கஞ்சா பற்றிய மேலதிக விசாரணைகளை முத்துர் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.