69 வது கடற்படை தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய மத திட்டம் கொழும்பில்

இலங்கை கடற்படையில் 69 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட இஸ்லாமிய மத திட்டம் இன்று டிசம்பர் 05 ஆம் திகதி கொழும்பு கோட்டை, சத்தாம் தெருவில் உள்ள ஜும்மா இஸ்லாமிய மசூதியத்தில் இடம்பெற்றது.

குறித்த மத திட்டத்தில் தாய்நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த கடற்படையினருக்கும், ஊனமுற்ற கடற்படையினருக்கும், தற்போதைய கடற்படைத் தளபதி உட்பட அனைத்து கடற்படை வீரர்களுக்கும் ஆசீர்வதிக்க பிரார்த்தனை நடைபெற்றது.

இந் நிகழ்வுக்காக கடற்படை பணிப்பாளர் நாயகம் வரவு செலவு மற்றும் நிதி ரியர் அட்மிரல் விஜித மெத்தேகொட, கடற்படை இஸ்லாமிய சங்கத் தலைவர், பிரஷான் மார்ஸோ உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர். இப் மத நிகழ்ச்சி கொழும்பு இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தின் கட்டனை அதிகாரி கேப்டன் மஹேஷ் த சில்வா அவருடைய வழிகாட்டுதலின் கீழ் நிருவனத்தின் கடற்படையினரினால் ஏற்பாடுசெய்ய்ப்பட்டது.