மனித கடத்தலை எதிர்த்து கடற்படை மற்றும் காவல்துறை மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கை

இன்று (2019 டிசம்பர் 05) காலை கடற்படை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையர்கள் ஒரு குழுவை கைது செய்யப்பட்டது.

மனித கடத்தலைத் தடுப்பதற்கான தொடர்ச்சியான பிரச்சாரத்தில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. கடற்படை மற்றும் காவல்துறையினர் இனைந்து இன்று காலை நீர் கொழும்பு களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து குடிபெயர முயன்ற இலங்கையர்கள் ஒரு குழுவை கைது செய்யப்பட்டது. கடல் வழியாக நியூசிலாந்துக்கு வெளியேற ரகசியமாக திட்டமிட்டு வான் வண்டி மூலம் நீர் கொழும்பு பகுதிக்கு வந்த போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 15 ஆண்கள் உட்பட வேனின் ஓட்டுனரையும் கைது செய்யப்பட்டது.

சந்தேக நபர்கள் 19 முதல் 46 வயதுடைய வாலச்சேனை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் இந்த சம்பவம் குறித்து நீர்கொழும்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மனித கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட கடத்தல்காரரை தேடும் நடவடிக்கையை கடற்படை மற்றும் காவல்துறை தொடங்கியுள்ளது.

மேலும், குடியேற்றச் சட்டம் கடுமையான இந்த காலத்தில், சட்டவிரோத வழிமுறைகள் மூலம் வெளிநாடு செல்ல முடியாது, அவ்வாறு செய்ய முயற்சிக்கும் மக்கள் மனித கடத்தல்காரர்களால் ஏமாற்றப்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திக்கொண்டு, பணத்தை அழித்துகொண்டு, இறுதியில் சட்டத்தால் தண்டிக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தை இருட்டடிப்பார்கள். இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் காரணத்தினால், யாருக்கும் சட்டவிரோதமாக குடிபெயர முடியாடு.